மருத்துவ முறை
 
 
பொது மக்கள் மருத்துவர்களை அணுக வேண்டும் என்றால் முதல் வழியாக அவர்கள் வாழும் நகர்புறத்திலோ அல்லது புறநகர் பகுதியில் உள்ள மருத்துவ நிலையத்தில் இருக்கும் பொதுநல மருத்துவரை (General Practitioner/GP) அணுக வேண்டும்.

குடியுரிமை (Australian citizenship) உள்ளவர்களுக்கு அரசு “Medicare Card” வழங்கும். சில பொது(GP) அல்லது சிறப்பு(Specialist) மருத்துவர்கள் சிகிச்சைக்கு ஈடான ஊதியத்தை “Bulk Billing” முறையில் பெறுவார்கள். இந்த முறையில் நோயாளி மருத்துவரை சந்தித்தமைக்கு அத்தாட்சியாக பொது அல்லது சிறப்பு மருத்துவரின் அலுவலகத்தில், எழுத்தரிடம் (Medical Surgery Clerk) கையெழுத்திட்டால் போதும். அரசு உங்கள் சார்பில் மருத்துவருக்கு உண்டான  ஊதியத்தை வழங்கிவிடும். சில பொது அல்லது சிறப்பு மருத்துவர்கள், அரசு குறிப்பிட்ட தொகைக்கு மேல் கட்டணம் வாங்க நேரலாம். அதனால், பொதுமக்கள் மருத்துவரை அணுகும் முன் “Bulk Billing” செய்வார்களா என்று தெரிந்துகொள்ளுவது நல்லது.

தனித்துறை வல்லுநரை(Specialist - eg:Cardiologist,Rheumatologist etc) பார்க்கவோ அல்லது அலோசனை (Consultation) பெறுவதற்கோ,பொதுநல மருத்துவரின் அனுமதி பெற்றோ அல்லது அவரின் கடிதத்துணையோடு, தனித்துறை வல்லுநரை சந்திக்கச்செல்வது உளங்கனிந்தச் செயல்.

 
பிரிஸ்பேன் நகரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த இரு பெரும் பொது மருத்துவமனைகள் உள்ளன. வடக்கு பகுதியில் இராயல் பிரிஸ்பேன் (Royal Brisbane Hospital -  Cnr Butterfield Street & Bowen Bridge Road,Herston,QLD-4029. Tel: (07) 3636 8111, Inpatients enquiries: (07) 3636 8222) பொது  மருத்துவமனையும், தெற்குப் பகுதியில் இளவரசி அலெக்சாண்டரா (Princess Alexandra Hospital -  Ipswich Road, Woolloongabba, QLD - 4102. Tel: (07) 3240 2111) பொது மருத்துவமனையும் இருக்கின்றது.
 
வடக்கு பிரிஸ்பேன் பகுதியில் வாழ்வோருக்கு - இளவரசர் சார்ல்ஸ் பொது மருத்துவமனை (Prince Charles Hospital - Rode Road, Chermside QLD - 4032.Tel: (07)3139 4000, Inpatients enquiries: (07)3139 4799 உள்ளது. தனியார் மருத்துவமனை தேவையென்றால் - வெஸ்லி (Wesley Hospital) மருத்துவமனை Auchenflowerல் அமைந்துள்ளது. (451,Coronation Drive,Auchenflower,QLD-4066.Tel:(07)3232 7000)
 
தெற்கு பிரிஸ்பேன் பகுதியில் வாழ்வோருக்கு, பொது மருத்துவமனைகள் என்று இராணி எலிசபத்து 2 மருத்துவமனையும் (Cnr Kessels & Troughton Roads Coopers Plains,QLD-4108.
Tel:(07)3275 6111), லோகன் மருத்துவமனையும் சேவை புரிகிறது.(Cnr Loganlea & Armstrong Roads Meadowbrook, QLD 4133.
Tel:(07) 3299 8820). தனியார் மருத்துவமனை தேவையென்றால் - Greenslopes Private Hospital உள்ளது.( Newdegate Street Greenslopes Qld 4120. Tel:(07) 3394 7111).
 
குழந்தைகளுக்கும், பெண்மணிகளுக்கும் முக்கியமான மருத்துவமனைகள் என்றால், வடக்கில், குழந்தைகளுக்கு - இராயல் குழந்தைகள் மருத்துவமனை.(Royal Children’s Hospital, Cnr Bramston Terrace & Herston Road, Herston, QLD – 4029.Tel:(07) 3636 3777) பெண்மணிகளுக்கு - இராயல் மகளீர் மருத்துவமனை (Royal Brisbane & Women’s Hospital -  Cnr Butterfield Street & Bowen Bridge Road,Herston,QLD-4029. Tel: (07) 3636 8111,
Inpatients enquiries: (07) 3636 8222)
 
தெற்கில், குழந்தைகளுக்கு, சேவை புரியும் மருத்துவமனை - மாட்டர் மருத்துவமனை (Mater Children’s Hospital, Raymond Terrace, South Brisbane QLD - 4101. Tele: (07) 3840 8195) அவர்களுக்கு ஒரு தனியார் குழந்தைகள் மருத்துவமனையும், அவ்வளாகத்தில் அமைந்துள்ளது.( Mater Children's Private Hospital, Raymond Terrace, South Brisbane QLD - 4101.Tele:(07)3840 2468)
 
குழந்தைகளைப் போல, பெண்மணிகளுக்கு பொதுமருத்துவமனையும் தனியார் மருத்துவமனையும் மாட்டர் மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ளது -Mater Mothers' Hospital - Raymond Terrace, South Brisbane QLD - 4101. Tele:(07)3840 8664 and  
Mater Mothers' Private Hospital - Raymond Terrace,
South Brisbane QLD - 4101. Tele:(07)3840 8111.
  
ஆஸ்திரேலிய நிரந்திரமான குடியிருப்பினர் படிவம்(Permanent Residence) பெற்றவர்களுக்கு, பொது மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு கட்டணம் தேவையில்லை. ஆஸ்திரேலியாவிற்கு வரும் விருந்தினர்களுக்கு (Visitors), பொது மருத்துவமனைகளில் மருத்துவம் சார்ந்த அறிவுரையோ அல்லது அலோசனைக்கோ கட்டணம் செலுத்தவேண்டும். ஆகையால், நிரந்திரமான குடியிருப்பினர் படிவம் பெறாதவர்கள் அல்லது விருந்தினர்கள், தனியார் மருத்துவக் காப்புறுதி (Private Health Insurance) பெற்றிருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது.
 
பெரும்பான்மையான மருத்துவமனைகளில் அவசரச் சிகிச்சைப் பிரிவு (Accident and Emergency Services) 24 மணி நேரமும் திறந்து இருக்கும்.
 
பொது மருத்துவமனைகளில் அனுமதிக்கபட்டிருக்கும் நோயாளிகளை பார்க்கும் நேரம்:
 
வார நாட்களில் - மதியம் 12 - 2 மணி வரை, மற்றும் மாலை 4 மணியிலிருந்து இரவு 8 மணி வரை.
 
வாரயிறுதி நாளும்,ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 12.30யிலிருந்து இரவு 8 மணி வரை.
 
குளிர்காலத்தில் (Winter season) அதிக அளவில் மக்களுக்கு உடல்நலக் குறைவின் காரணத்தால், அவசரச் சிகிச்சை பிரிவுகளில், நோயாளிகளின் கூட்டம் அதிகமாகயிருக்கும். ஆகையால் இலையுதிர் காலத்தில் (Autumn season) தேவையான முன்னெச்சரிக்கைகள் எடுத்துகொள்வது முக்கியம். முதியோர், குழந்தைகள் மற்றும் நீண்டகால உடல்நலக் நிலையாமை (Chronic Medical Conditions like Diabetes,Heart diseases,Asthma etc) உள்ளோர்  தடுப்பூசிகளைப் பற்றி தங்கள் பொதுநல மருத்துவரிடம் அறிவுரை எடுத்துக்கொள்வது சிறப்பு. (எடுத்துகாட்டாக - நீர்க்கோப்புடன் கூடிய கடும் தொற்றுக்காய்ச்சல் தடுக்கும் அம்மை குத்துதல் - Influenza vaccination, நுரையீரல் வீக்கத்தால் உண்டாகும் நோய் - Pneumonia  vaccination)
 
சில மருந்துகளை, மருந்துக்கடையில் நேரடியாக வாங்க முடிந்தாலும் பெரும்பான்மையான மருந்துகளை மருத்துவரின் மருந்துச்சீட்டு இருந்தால் தான் வாங்கமுடியும்.