பொழுதுபோக்கு
உங்கள் பொழுதை கழிக்க கவலைப்பட அவசிமில்லாத அளவு இடங்கள் பிரிஸ்பேனைச் சுற்றி
உள்ளது.
அவற்றுள் சில...
1) பிரிஸ்பேன் நகரம்
(Brisbane City)
பிரிஸ்பேன் நகரம் எனப்படுவது மிகச் சில தெருக்களால் ஆனது. வணிகக் கட்டிடங்கள், கசினோ,
திரை அரங்குகள், குவீன் தெரு பல்பொருள் அங்காடிகள், உணவகங்கள் என எப்போதும்
பரபரப்பில் இருப்பது.
2)லோன் பைன் கோலா
கங்காரு சரணாலயம் (Lone Pine Koala Sanctuary)
கங்காருவுடன் கோலாவுடன் புகைப்படம் எடுக்க சிறந்த இடம். ஆஸ்திரேலியாவின் சிறப்பு
மிருகங்கள், மற்றும் பறவைகளை இங்கு காணலாம். பிரிஸ்பேன் நகரத்தில் இருந்து சுமார்
முப்பது நிமிட பேருந்து பயணத்தில் இங்கு செல்லலாம்.
3)தென்கரை (South Bank)
பிரிஸ்பேன் நதிக்கரையின் மறுபுறம் உள்ள பகுதி தென்கரை. பன்முகப் பண்பாட்டை உணர
சிறந்த இடம் இது. ஐமேக்ஸ் திரையரங்கம், உலக உணவகங்கள், தேனீர் கடைகள்,
செயற்கை-கடற்கரை, பூங்காக்கள் என உங்களை கலகலப்பூட்டும் பகுதி இது. வெள்ளி இரவுகளில்,
தெரு நடனங்களும், ஒளி விளக்குகளும் இந்தப் பகுதியை அலங்கரிக்கும்.
4)தங்கக் கரை(Gold
Coast)
பிரிஸ்பேன் நகரத்தில் இருந்து சுமார் ஒரு மணி நேர கார் பயண தூரத்தில்
அமைந்திருக்கும் கடற்கரை நகரம் கோல்ட் கோஸ்ட். இந்த நகரத்தை சுற்றி திரைப்பட
உலகம்(Movie World), கடல் உலகம்(Sea World), கனவுலகம்(Dream World) போன்ற சுற்றுலா
பொழுதுபோக்குத் தளங்கள் உள்ளன. அழகான கடற்கரைகள் இந்த நகரத்தை சொர்க்கமாக
தோற்றுவிக்கிக்கின்றன.
5)திரைப்படங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள்
தமிழ் திரைப்படங்கள் அவ்வப்போது திரையிடப்படும். தமிழ் பிரிஸ்பேன் யாஹூ குழுமத்தின்
மூலமாக விவரங்கள் அறியலாம்.
கலை விழாக்கள் பொதுவாக சனி அல்லது ஞாயிறுகளில் நடக்கும். தமிழ் பிரிஸ்பேன்
நாட்காட்டியில் விவரங்கள் அறியலாம்.
6)விளையாட்டு
குழந்தைகள் விளையாட அனைத்துப் பகுதிகளிலும் பூங்காக்கள் அமைத்துள்ளது பிரிஸ்பேன்
நகராட்சி. கிரிக்கெட் மைதானங்களும், டென்னிஸ் மற்றும் பேட்மிட்டன் அரங்குகளும் பல
பகுதிகளில் அமைந்துள்ளன. குவீன்ஸ்லாந்து தமிழ் சங்கம் மற்றும் தமிழ் பள்ளிகள்
அவ்வப்போது விளையாட்டு நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பார்கள்.